2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வரக்காபொல நிமலைத் தேடி விசுவமடுவில் அகழ்வுப்பணி

எஸ்.என். நிபோஜன்   / 2017 மே 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கொ​ன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வரக்காபொலயைச் சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபரின் தடயங்களைத் தேடி, விசுவமடு பகுதியில், நேற்று (24) நான்காவது தடவையாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த நபர், கடந்த 2009ஆம் ஆண்டில், விசுவமடு இராணுவ முகாமில் பணிக்குச் சேர்ந்திருந்த நிலையில், 2010 பெப்ரவரி மாதம் முதல், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்காமல் போனதாகக் குறிப்பிட்டு, அவரது மனைவியால், வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், குறித்த நபர் , கடந்த 2010ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டதால், அவரை அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அதன் பின்னர் அவர் மீண்டும் முகாமுக்கு வரவில்லை என்றும், இராணுவத் தரப்பு  தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கு, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், அவரை எவரேனும் கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், முல்லைத்தீவு நீதவான் எம்.எஸ்.எம் .சம்சுதீன் முன்னிலையில், ஏற்கெனவே மூன்று முறை, நிமலின் தடயங்களைத் தேடி,  அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே, நான்காவது நாளாக, நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும், தடயங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .