2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

வவுனியா, மூன்று முறிப்பில் சிலை விற்பனை நிலையம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கருங்கல் மூலம் சிலைகள் சிற்பங்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலகம் வவுனியாவில் மூன்று முறிப்பு என்னுமிடத்தில் நீண்டகாலமாகவே இயங்கிவருகின்றது.

பாரம்பரிய முறைகளைக்கொண்டு சிலைகள் சிற்பங்கள் நினைவுக் கல்லுகள் செதுக்கப்படுகின்றது.

வழமையாகவே பாவிக்கப்படும் உளி சுற்றியல் கொண்டு தயாரிக்கப்படும் சிற்பங்களுக்கு கேள்வி அதிகரித்துள்ளதாக   ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெய்வ சிற்பங்களே அதிகளவு தயாரிக்கப்படுவதாக பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இருந்து சிற்பங்களை பெற்றுக்கொள்ள நிறைய கொள்வனவு கட்டளைகள் வருகின்றபோதிலும், இந்தத் தொழிலுக்கு வருபவர்களுடைய தொகை குறைவாகவே உள்ளதாகவும் சுட்டிகாட்டப்படுகின்றது.

மூலப்பொருளான கருங்கல்லு மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .