2021 ஜூன் 19, சனிக்கிழமை

கடும் காற்றினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னாரில் கடந்த சில தினங்களாக கடும் காற்று வீசி வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது. இதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்வது குறைவடைந்துள்ளதோடு காற்றின் காரணமாக மீன் பிடிபடுவதும் குறைவாக உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இக்காற்றினால் மக்களின் கண்களினுள் தூசிகள் படுவதினால் கண் நோய் ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .