2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பளை வைத்தியசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கண்ணன்)

பளை வைத்தியசாலைக்கு நிரந்தரக் கட்டடம் ஒன்றை அமைத்து, விரைவில் அதனை இயங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்த அனர்த்தம் காரணமாக குறித்த வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கட்டடங்கள் யாவும் தரைமட்டமாகிக் காணப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது தற்காலிக இடமொன்றில் வெளிநோயாளர் சேவை மட்டும் இடம்பெற்று வருகின்றது. ஏனைய நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்குச் சென்றே சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பளைப் பிரதேசத்தில் மக்கள் குடியேறியுள்ள நிலையில் வைத்தியசாலையில் நிரந்தர வைத்திய சேவைகள் இடம்பெறாமையால் தாம்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .