2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

விடுதலைப் புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் இளம் யுவதி ஒருவர் செட்டிகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரண கிராமத்தில் வசித்து வந்த நிலையில் பின்னர் உறவினர்களுடன் செட்டிகுளத்தில் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டதாக செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை பெற்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த யுவதி முல்லைத்தீவைச் சேர்ந்தவரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர் மீதான மேலதிக விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவொன்று தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .