Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
நீண்டகாலமாக கல்விச்சேவை புரிந்துவரும் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என துணுக்காய் வலயத் தொண்டர் ஆசிரியர்கள், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யோகபுரம் மகாவித்தியாலயத்தின் கணனிப்பயிற்சிகூடத்திறப்பு விழாவில் நேற்று ஆளுநர் கலந்து கொண்ட போதே அவரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மகஜர் ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
போர்க்கால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10 வருடங்களுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில்கல்விச்சேவையைப் புரிந்து வருகின்றோம்.
வாழ்க்கைசெலவு அதிகரித்த போதும் இதுவரை தொண்டர் ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படவேயில்லை.
கிளிநொச்சி, முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு அது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.
துணுக்காய் வலயத்தைச் சேர்ந்த பல தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்ற போதும் அவர்களுக்கும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
எனவே இது விடயத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டராசிரியர்களின் கோரிக்கை தொடர்பாகப் பரிசீலித்து அவர்களின் நிரந்தர நியமனங்களை விரைவில் வழங்குவதாக ஆளுநர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
58 minute ago
1 hours ago