2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சாந்தபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவி

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (சரண்யா)

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இங்கு மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இந்திய அரசு அன்பளிப்புச் செய்திருந்த தறப்பாள்கள் மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் இப்பகுதிக் குடிதண்ணீர் கிணறுகளை இறைப்பதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நீரிறைக்கும் இயந்திரம் ஒன்றையும் வழங்கியிருந்தார்.

அத்துடன் மக்களின் அன்றாடப் பாவனைக்குத் தேவையான வாளி, பேசின் போன்ற பொருள்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மக்களுக்கு வழங்கியதுடன் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

altaltaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .