2021 ஜூலை 29, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் பாம்பு கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பாம்பு கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தருமபுரம், புளியம்பொக்கனை, பிரமந்தானாறு, ஊரியான், கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாம்புக் கடிக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் வெளிச்சமின்றி காணப்படுவதாலேயே பலர் பாம்பு கடிக்கு இலக்காவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .