2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

பரிசளிப்பு வைபவமும் உத்தம நபியின் உதயதின விழாவும்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கிளிநொச்சி மாவட்ட நாச்சிக்குடா அல்-மதுரஸதுல் ஜமாலியாவின் அல்குர்ஆன் அறிவை வளர்க்கும் வகையில் நடத்தப்பட்ட மாணவர்களின் நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு வைபவமும் உத்தம நபியின் உதயதின விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நாச்சிக்குடா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது.

வடக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல பாகங்களிலும் வாழ்ந்து வரும் நிலையில் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் மீளக்குடியமர்ந்த மக்கள் நடத்திய பெரு விழா இதுவாகும்.

கிறாத், பேச்சு, பாடல் கசீதா உட்பட பல நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பபட்ன. பிரதம அதிதியாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .