2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வவுனியா நகர வர்த்தகர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(விவேகராசா)

வவுனியா நகர வர்த்தகரும் மரண விசாரணை அதிகாரியுமான ஏ.கே.இராசலிங்கம் கொள்ளையரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கையில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகர வர்த்தகரும் மரண விசாரணை அதிகாரியுமான ஏ.கேஇராசலிங்கத்தின் வீட்டில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் கொள்ளையிடச் சென்ற   கொள்ளையர்களை தடுக்க முயன்றபோதே, அவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.  

இதன்போது, அவரது மனைவி கழுத்திலிருந்த சுமார் 10 பவுண் தாலிக்கொடி உள்ளிட்ட பல நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

நேற்றிரவு 10 மணியளவில் மேற்படி நபருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X