2021 மே 14, வெள்ளிக்கிழமை

மன்னார் காட்டுப்பள்ளிவாயல் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளிவாயல் பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிகள் அடர்ந்த காடுகளாக மாறியுள்ள நிலையில்  அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் பாலியல் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுவதாக  முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

குறித்த காட்டுப்பகுதியில் இளைஞர்கள் குழுவினர் போதை பொருட்களை பாவிப்பதற்கு வந்து செல்வதுடன் பெண்களை அழைத்து வந்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளதாகவும் குறித்த சம்பவத்துடன் தொடர்பு படுபவர்கள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .