2021 ஜூன் 16, புதன்கிழமை

உலக விலங்கு விசர் நோய் தினம்; மன்னாரில் விழிப்புணர்வு பேரணி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

உலக விலங்கு விசர் நோய் தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை காலை மன்னாரில் மாபெரும் வீதிப் பேரணி இடம்பெற்றது. மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் விலங்கு விசர் நோய் விழிர்ப்புணர்வு திட்டத்தின் கீழ் மேற்படி வீதிப் பவணி இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து விழிப்ர்ப்பூட்டும் வீதிப்பவனி ஆரம்பமானது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதிக்கு சென்று மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சென்றடைந்தது.

பாடசாலை மாணவர்கள், அலுவலர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பேரணியில் கலந்து கொண்டதோடு மக்களை விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர்.


  Comments - 0

  • risimb Wednesday, 28 September 2011 12:46 AM

    [சிறுவர் துஸ்பிரயோகம்,பெண்கள்,ஆண்கள் படுகொலை] போன்ற செயல்களால் சிலமனிதர்கள் விசர் பிடித்துதிரிகின்றனர். அவர்களின் முகங்களை பேரணி அட்டையில் பதிவுசெய்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டீங்களே........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .