2021 ஜூன் 16, புதன்கிழமை

வவுனியாவில் குடியியல் மேல் முறையீட்டு நீதிமன்றம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் அமைக்கப்பட்டு வந்த குடியியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 2 மணிக்கு இந்நீதிமன்றம் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவினால் திறந்து வைக்கப்டவுள்ளதுடன் காலை 9 மணிக்கு கிளிநொச்சி நீதிமன்ற கட்டிடத்தொகுதியும் திறந்து வைக்கப்படவுள்ளது.

நீண்ட கால இடைவெளியின் பின்னர் இயங்கிவரும் கிளிநொச்சி நீதிமன்றம் தற்போது நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு பின்புறமாகவுள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் சட்டத்தரணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர். எனினும் தற்போது புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ளமையினால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக புதிய கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .