2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் இன்று 409 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

  (சரண்யா) 

altமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று 409 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படுவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ள 19 கிராமசேவகர் பிரிவுகளில் ஒன்றான விசுவமடு மேற்குக் கிராமத்திலேயே அவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .