2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியேற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 ஆயிரத்தி 528 பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 16 ஆயிரத்தி 769 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பாகத் தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 86 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்தி 577 குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்தி 466 குடும்பங்களும், ஒட்டுசுட்டான்  பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்தி 484 குடும்பங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 ஆயிரத்தி 242 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்- என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .