2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அகழ்வின் விளைவால் உருவெடுத்த நீர் நிலைகள்

Niroshini   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தின்  பல பகுதிகளில்  தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத  மணல்  அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய பள்ளங்களில், தற்போது மழை நீர் தேங்கி நின்று, அவை ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாறியுள்ளன என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அப்பகுதி மக்கள், சாதாரன நிலப்பரப்புகளாகக் காணப்பட்ட பிரதேசங்களில், கடந்த காலங்களில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்ததாகவும் இதனை கண்டித்து அவ்வவ்போது போராட்டங்கள் இடம்பெற்ற போதும், சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதன் விளைவாக, பொதுமக்களின் காணிகள் உட்பட இரணைமடு குளத்தின் கீழ் பகுதி, ஆற்றுப் பகுதிகளில் பாரிய குழிகள் ஏற்பட்டன எனத் தெரிவித்த மக்கள், இவ்வாறு ஏற்பட்ட குழிகளில், தற்போது மழை நீர்  தேங்கி, அவை சிறிய நீர் நிலைகள் போன்று காட்சி அளிப்பதாகவும் கூறினர்.

பல அடிகள் ஆழம் கொண்ட பள்ளங்களாக நீர் நிரம்பி காணப்படும் இந்தப் பிரதேசங்கள், தற்போது ஆபத்தான பகுதிகளாக மாறியுள்ளன எனத் தெரிவித்த அப்பகுதி மக்கள், சாதாரணமாக பழைய நினைவுகளில் இந்தப் பகுதிகள் ஊடடாக செல்கின்றபோது, அது உயிர்  ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .