Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சதோச வளாகத்தில், தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணிகள், இன்று (10) எவ்வித அறிவித்தல்களுமின்றி திடீரென இடைநிறுத்தப்பட்டு உள்ளன.
குறித்த வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 67 தடவைகள் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாள்கள் என்பதால், இன்று (10) காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட இருந்தது. ஆனால், இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை.
சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆகியோர் வளாகத்துக்கு சமூகமளிக்காததன் காரணமாகவே, அகழ்வுப் பணிகள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
16 minute ago
32 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
39 minute ago
52 minute ago