2026 மே 02, சனிக்கிழமை

அக்கராயனுக்கு குடிநீர் வழங்க தனி வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் கிழக்குக்கான தனியான வேலைத்திட்டத்தின் ஊடாக, குடிநீரை வழங்குவதென, மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அக்கராயனில், 433 குடும்பங்களுக்கு, குடிநீர் வழங்கும் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், அக்கராயன் கிழக்குக்கான குடிநீர் வழங்கும் வேலைகள், அக்கராயன் தாழ்பாலம், மேம்பாலமாக மாற்றியதன் பின்னர் பாலத்துடன், இணைந்ததாக குடிநீர் வேலைகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், மேம்பாலம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாக, அக்கராயன் கிழக்கு மக்களின் குடிநீர் அவசியத்தைக் கருத்திற் கொண்டு, அக்கராயன் ஆற்றைக் கடந்து, அக்கராயன் கிழக்குக்கான குடிநீர் வேலைத்திட்டங்களை, விசேட வேலைத் திட்டத்தின் ஊடாக முன்னெடுப்பதென, மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல்கட்டமாக, அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்த் தாங்கியில் இருந்து 262 குடும்பங்களுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .