Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ், 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான கூட்டம் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில், நேற்று (24) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விவசாயிகளால் அக்கராயன் குளத்தின் 4ஆம் வாய்க்கால் உட்பட முக்கிய வாய்க்கால்கள் புனரமைக்கப்பட வேண்டும், நெல்லுக்கான நிர்ணய விலை அறுவடை தொடங்க முதல் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விவசாயிகளின் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago