2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்கள்

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – துணுக்காய், பழையமுறிகண்டி, அதனைஅண்டிய பழம் பெரும் கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சொல்லனத்துன்பங்களை அனுபவித்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட பழைய முறிகண்டிக்கிராமம் மிகவும் பழமை வாய்ந்த ஓரு கிராமமாக காணப்படுகின்ற போதும், இந்தக்கிராமத்தின் அபிவிருத்திகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, இந்தப் பிரதேசத்துக்கான பிரதான வீதி முதற்கொண்டு ஏனைய வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாது இருக்கின்றன.

இதேவேளை இந்தப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்ற போதும், காட்டுயானைகளை கட்டுப்படுத்த யானை வேலைகள் அமைப்பதாக சொல்லப்பட்டபோதும், இன்று வரை எந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள இப்பிரதேச மக்கள், தாங்கள் அன்றாடம் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்குகூட பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், தமது கிராமம் தாங்களும் தனித்து விடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல தடவை தங்களுடைய குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டிள்ள போதும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .