2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’அடிப்படை வசதிகளை உருவாக்கவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு – அமைதிபுரம் கிராம அலுவலர் பிரிவுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குமாறு, இக்கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த பத்தாண்டுகளாக இக்கிராமத்துக்கான பஸ் சேவைகள் இடம் பெறாததன் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், துணுக்காய் பிரதேச செயலகம் ஏனைய இடங்களுக்குச் சென்று வருவதில் கிராம மக்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர்.

110க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராம அலுவலர் பிரிவில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. அமைதிபுரத்தில் இருந்து துணுக்காய் வரை பஸ் சேவைகள் இடம் பெறாததன் காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இக்கிராமத்தில் இருந்து இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள துணுக்காய் பிரதேச செயலகத்திற்குச் சென்று வருவதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

சமுர்த்திக் கொடுப்பனவுகளை அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் அமதிபுரம், ஆரோக்கியபுரம் பகுதிகளில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கிராமத்தில் குடிநீர், போக்குவரத்து, குளப் புனரமைப்பு, வயல் நிலங்களுக்கான வாய்க்கால்கள் புனரமைப்பு, கிராம வீதிகள் புனரமைப்பு என்பன முழுமையாக வேலைகள் இடம் பெற வேண்டும் என அமைதிபுரம் பொது அமைப்புகள், துணுக்காய் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .