Editorial / 2023 ஜனவரி 08 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கிராஞ்சியில் தமது வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி, நூறாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள், சனிக்கிழமை (07) கறுப்பு துணிகளால் வாய்களைக் கட்டி தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாங்கள், கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் தங்களுடைய வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அட்டைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் எனறார்.
40 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
09 Nov 2025