Niroshini / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - அம்பலப்பெருமாள் குளத்தின் அணைக்கட்டின் மேலாக, வீதியை உருவாக்க வேண்டாமென, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது துணுக்காய் - உயிலங்குளத்தில் இருந்து அக்கராயன் வரை வீதி புனரமைக்கப்படுகின்றது. இதில் அம்பலப்பெருமாள் குளத்தில் இருந்து நான்கு கிலோமீற்றர் வீதி, அக்கராயன் பக்கமாக நிரந்தர வீதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதியில் இருந்து அணைக்கட்டு மேலாக நடைபெறுகின்ற வீதியை நிரந்தர வீதியாக உருவாக்காமல், அணைக்கட்டைத் தவிர்த்து, நிரந்தர வீதியை உருவாக்குமாறும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரணம், அம்பலப்பெருமாள் குளம் எதிர்காலத்தில் புனரமைக்கப்படவுள்ளமையால், குறித்த அணைக்கட்டை கடந்து நிரந்தர வீதி அமையுமானால், குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறுகள் ஏற்படும் எனவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
21 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
14 Nov 2025