2025 மே 17, சனிக்கிழமை

அதிகளவான சோதனைச் சாவடிகளால் வீதிகளில் செல்வோருக்கு அச்சம்

Editorial   / 2020 மே 28 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில், இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகள் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கொவிட்-19 நெருக்கடி நாட்டுக்குள் வந்த பின்னர், வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ள இராணுவத்தினர், அப்பகுதியூடாக காலை, மாலை, இரவு நேரம் என செல்லும் மக்களை சோதனைக்கு உட்படுத்துவதாகவும் அவர்களின் விவரங்களைப் பதிந்துகொள்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கொவிட்-19 நெருக்கடியின் போது, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் இரண்டு கிலோமீற்றருக்கு ஒரு தடவை என சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டிய தேவை என்ன என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தங்களது விவரங்கள் சேகரிக்கப்படுவதால், இதனால் மக்கள் அச்சமடைவதாகவும் தற்போது மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவடிகளையும் குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .