2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அதிக விலைக்கு மரக்கறி விற்பனை

Niroshini   / 2021 மே 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பஸார் பகுதியில் உள்ள சில மரக்கறி விற்பனை நிலையங்களில், அதிகூடிய விலைக்கு மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டதாக, நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடு, இன்று (25) தளர்த்தப்பட்ட நிலையில், குறிப்பிட்டளவு மரக்கறி விற்பனை நிலையங்களே திறக்கப்பட்டிருந்தன.

இருந்த போதும், ஒவ்வொரு மரக்கறி விற்பனை நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான நுகர்வோர் ஒரே நேரத்தில் பொருட்களை கொள்வனவு செய்யவதை காணமுடிந்தது.

இதன் போது, சில விற்பனை நிலையங்களில், கூடிய விலைக்கு மரக்கறி வகை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் தெரிவித்தனர்.

அதாவது, ஒரு கிலோகிராம் மரக்கறி 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, மரக்கறி வகைகளை கட்டுப்பாட்டு விலையில் விற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .