2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அத்துமீறிய குடியேற்றத்துக்கு தடை

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பளை - கரந்தாய் பகுதியில், அத்துமீறிய குடியேற்றத்துக்கு தடை விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், நேற்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், குறித்த காணியை உரிமம் கோருவோர், அது தொடர்பான ஆவணங்களுடன், ஏப்ரல் 30ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும், நீதவான் உத்தரவிட்டார்.

கரந்தாய் பிரதேசத்தில், தமக்கு சொந்தமானதென உரிமைகோரும் காணியில், அபப்குதி மக்கள், செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை அத்துமீறி குடியேறினர்.

குறித்த பகுதியில், தலா ஒரு ஏக்கர் வீதமான காணிகள், கிளிநொச்சி மாவட்டக் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவால் 101 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், அக்காணியை, தெங்கு அபிவிருத்தி சபை, தமது காணியென உரிமை கோரி, அக்காணியில் மக்கள் குடியேறுவதற்கான அனுமதியை மறுத்து வந்தது.

குறித்த காணி விடயம் இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (16) காலை 6 மணியளவில், குறித்த காணியில், அப்பகுதி மக்கள் அத்துமீறி நுழைந்து கொட்டகைகளை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்டக் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவால், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, நேற்று (17) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .