Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு, இன்று (05) செய்தி சேரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று (05) முற்பகல் 9 மணிக்கு நடைபெற்றது.
இணைத் தலைவர்களான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, ரிஷாட் ஜமால்டீன் ஆகியோரின் தலைமையில், இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், வழமையாக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில், அரச உத்தியோகத்தர்களுக்கு வீடு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் சம்பவங்கள் தெடார்பில் கலந்துரையாடப்பட்டதால், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனால் ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இன்றைய தினம், கூட்டம் ஆரம்பமானபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், ஊடகவியலாளர்களை நோக்கி, நீங்கள் செய்தி, தகவல்கள் சேகரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லையெனவும் ஆனால், நேரடியாக வீடியோ எடுப்பதை நிறுத்துமாறும் கோரினார்.
மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவே, தாம் இங்கு வந்துள்ளதாகவும், எனவே அதற்கான உங்களது ஒத்துழைப்புகள் கோரப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, இச்செயற்பாடு, ஊடகத்தை அடக்குமுறை செய்வதாக இருக்கிறதென, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் தெரிவித்தார்
இதன்போது பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான சுற்றுநிரூபத்தில், ஒருங்கிணைப்புக் குழு தொடர்பான விதிகள் உள்ளதாகவும் அதில் ஊடக அடக்குமுறை தொடர்பாக எதுவும் இல்லையெனவும் கூறினார்.
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago