2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தித் தொடர்பான கூட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் மேற்கு அபிவிருத்தித் தொடர்பான கூட்டம் இடம்பெற்றுள்ளது.

அக்கராயன் கிராம அலுவலர் ப.சபாரட்ணம், தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மண்டபத்தைத் திறத்தல், புனரமைக்கப்பட்டுள்ள பொதுக் கிணற்றை சிறப்பாகப் பயன்படுத்துதல், மழை காலத்தில் மர நடுகை மேற்கொள்ளுதல் எனப் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், பொது மண்டபத்தை விரைவாகத் திறந்து வைப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தினால் பத்து இலட்சம் ரூபாய் வரையான நிதியில் அமைக்கப்பட்டுள்ள பொது மண்டபம் இரு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு உட்படாமல் இருப்பதன் காரணமாக விரைவில் மண்டபத்தைத் திறந்து வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X