2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அம்பலப்பெருமாள்குளத்தின் வான்பகுதியை புனரமைக்கவும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - அம்பலப்பெருமாள்குளத்தின் வான்பகுதியை வரும் மழை காலத்துக்கு முன்னர் புனரமைப்புச் செய்யுமாறு, கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தாண்டு டிசெம்பர் மாத பெரும் மழையின் போது, குளத்தின் நீர் மட்டம் உயர்ந்த போது குளத்தின் வான்பகுதி சேதமடைந்து இருந்ததன் காரணமாக வான்பகுதி உடைப்பெடுக்கக் கூடிய அபாய நிலை காணப்பட்ட நிலையில் ஒன்றுகூடிய விவசாயிகள் ஏழு பெட்டி உழவு இயந்திரம் மூலம் கற்களை வான்பகுதியில் குவித்து மண் மூடைகள் அடுக்கியும் குளத்தின் வான்பகுதியைப் பாதுகாத்தனர்.

பின்பு இக்குளத்தின் வான்பகுதியைப் பார்வையிட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், வான்பகுதியைப் புனரமைப்பதற்கு 120 மில்லியன் ரூபாய்க்கும் மேலான நிதி தேவைப்படுவதாக தெரிவித்து இருந்தனர்.

குளத்தின் வான்பகுதி சேதமடைவதற்கான பிரதான காரணம் துணுக்காயில் இருந்து அக்கராயன் வழியாக நடைபெறுகின்ற போக்குவரத்து இவ்வான்பகுதி வழியாகவே நடைபெறுவதன் காரணமாக சுமைகளுடன் செல்கின்ற பாரவூர்திகளால் குறித்த வான்பகுதி தொடர்ந்து சேதமடைவதாக விவசாயிகள் தெரிவிப்பதுடன், வரும் மழைக்கு குறித்த வான்பகுதி உடைப்பெடுப்பதற்கு முன்னர் வான்பகுதியைப் புனரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .