Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2019 மார்ச் 05 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு அம்பலப்பெருமாள்குளத்தின் வான் பகுதியில் மேம்பாலம் அமைத்தல், புனரமைத்தல் என்பவற்றுக்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதி துணுக்காயில் இருந்து அக்கராயன், முழங்காவில், கிளிநொச்சி போன்ற இடங்களுக்கான முக்கிய போக்குவரத்து வீதியாக உள்ளது. சுமைகளுடன் செல்லும் பாரவூர்திகளினால் மீண்டும் மீண்டும் வான்பகுதி சேதமடைகின்ற நிலையில் வான் பகுதியில் மேம்பாலத்தினை அமைப்பதற்கான திட்டமிடல்களை வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பெரும் மழை பெய்யுமானால் அம்பலப்பெருமாள் குளத்தின் வான்பகுதி உடைப்பெடுக்கக் கூடிய அபாய நிலையே காணப்படுகின்றது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025