Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 20 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“அரச உத்தியோகத்தர்களுக்கு என அமைக்கப்பட்ட வீடுகள் சமூகவிரோதச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன” என, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், பனிக்கங்குளம் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
“2010ஆம் ஆண்டின் பின்னர், அரச உத்தியோகத்தர்களுக்கென பனிக்கங்குளம் கிராமத்தில், ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த ஐம்பது வீடுகளில், அரச உத்தியோகத்தர்கள் ஒருவர் கூட குடியேறாததன் காரணமாக, வீடுகள் பற்றைகளாக காணப்படுகின்றன.
“ஏ-9 சாலையின் ஓரத்தில், இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பிற இடங்களில் இருந்து வருபவர்கள், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு இவ்வீடுகளை பயன்படுத்தி வருகின்றன.
“இது தொடர்பாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு, கடந்த காலங்களில் நேரிலும் எழுத்து மூலமும், இப்பகுதி பொது அமைப்புகளினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இறுதியாக நடைபெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், இவ்விடயம் தொடர்பாக, பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“இவ்வீடுகளில் அரச உத்தியோகத்தர்கள் உடனடியாக குடியேற வேண்டும். இல்லையேல், மாவட்டச் செயலாளர் நேரடியாக வீடுகளைப் பொறுப்பு எடுத்து, மாவட்டத்தில் வீடுகள் இல்லாத வறுமை நிலையில் வாடும் குடும்பங்களுக்கு குறித்த வீடுகளை கையளிக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீடுகள், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதன் காரணமாக, பனிக்கங்குளம் கிராம மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago