2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அறுகம்குன்று பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை

Editorial   / 2020 மே 25 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் - நானாட்டன் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்குன்று கிராமத்தில் உள்ள சில குடும்பங்களின் அடிப்படை பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு, நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அந்தக் குடும்பங்கள், அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரும் நிலையில், தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்,  ஊரடங்குச் சட்டம் காரணமாக, அன்றாட கூலி தொழிலையும் இழந்து மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மக்களின் பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே, பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இந்த நடிக்கையை முன்னெடுத்துள்ளார். 

இதற்கமைய, நீர், மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதுடன், அவர்களுக்கான காணிகளின் உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டார். 

அத்துடன், சமுர்த்தி கொடுப்பனவு, அரச வீட்டுத்திட்டம் தொடர்பான நிலைமையையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .