Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 27 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இருந்து அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களால் அவர்களின் வீடுகளில் உள்ள வயோதிபர்கள் பாதிக்கப்பட்டு, நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வருவதாக, முல்லைத்தீவு மாவட்டத் தொற்றுநோய்த்தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (26) நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான கூட்டத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட நிலமைகள் தொடர்பில் கருதடதுரைத்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் இளைஞர், யுவதிகள் என்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டாலும், அதன் தாக்கம் காட்டவில்லை எனவும், ஆனால் அவர்களின் வீடுகளில் உள்ள வயோதிபர்கள் இவர்கள் ஊடாக தொற்றுக்குள்ளாகி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவர்களில் மூன்றில் இரண்டு பேருக்கே, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர். இந்நிலையில், அதில் பணியாற்றிய அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
தற்போது வைத்தியசாலையில் பி.சி.ஆர் எடுப்பவர்களில் அரை வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், அவர்களின் வயது 45க்கு மேற்பட்டதாக காணப்படுவதாகவும் கூறினார்.
3 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago