2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’ஆடைத்தொழிற்சாலை திறப்புக்கு எதிராக வழக்கு’

Niroshini   / 2021 ஜூன் 07 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினர், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.


கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான அறிவுறுத்தல் கடிதம் ஒன்று புதுக்குடியிருப்பு, சுகாதார  வைத்திய அதிகாரி  பணிமனையினரால,; புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மனிதவள முகாமையாளருக்கு, நேற்று (06) வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அல்லது தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பரிசோதனையில் கொரோனர் தொற்று அறியப்படாதவர்களைக் கொண்டு, உரிய சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து, ஆடைத்தொழிற்சாலையை மீள இயக்குமாறு, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுயதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ அல்லது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்திலிருந்தோ தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் தவிர்க்கப்படல் வேண்டுமென்றும், அக்டிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தடன், 'சகல ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்தவும், அதிக நோய்த் தொற்றுள்ள பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சம்பந்தமான தகவல்களை, தங்கள் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உடன் அறியத்தர வேண்டும்.

'சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் தங்கள் உத்தியோகத்தர்களுக்கு எழுமாறான பி.சி.ஆர் செய்யப்படும் போது, அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

'ஊழியர்கள் வேலைசெய்யும் வேலைத்தளத்தின் கண்காணிப்பு கமரா பதிவுகளைத் தேவைப்படும் போது, சுகாதார வைத்திய அதிகாரி, உத்யோகத்தர்கள் பார்வையிட ஒழுங்கு செய்யப்பட வேண்டும்' எனவும், அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்த நிலையில், புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிலசாலையை மீளத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினர்; தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X