சண்முகம் தவசீலன் / 2019 மார்ச் 06 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்கொணர்வு மனு மீதான 2 ஆம் கட்ட விசாரணையை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலே இடம்பெற்று வந்தது.
அந்த வகையிலே ஒரு பகுதியினரது ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு தற்போது வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கு இடம்பெறுகின்ற நிலையில் இரண்டாவது கட்டமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று (06) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரட்ணவேல் தெரிவித்தார்.
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago