2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘ஆணித்தரமாகக் கூறமுடியாது’

Editorial   / 2019 மே 14 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பிருக்கிறதா என்பதை தன்னால் ஆணித்தரமாகக் கூறமுடியாதென, சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரவித்தார்.

வவுனியா - குருமன்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரைத்த அவர், தீவிரவாதத்துக்கு ஆதரவாக, ரிஷாட் பதியூதீன் தெரிவித்தப் பதிவுகளை தான் எங்கும் காணவில்லையெனவும் அதனால் அவருக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தனக்கு தெரியாதெனவும் தெரிவித்தார்.

ஆனால், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, தனது வாயாலேயே சில வார்த்தைகளை கூறியிருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த நிலையில் பயங்கரவாதிகளுடன் இவருக்கு தொடர்பிருக்கிறது என்பதனை அவரே தெட்டத்தெளிவாக கூறியிருப்பதாகவும் கூறினார்.

தீவிரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்படவில்லையெனவும் இந்தச் சம்பவத்துடன் யார், யார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பதும் எந்தெந்த அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பிருக்கின்றது என்பதும் உறுதியாகவில்லையெனவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .