2025 மே 08, வியாழக்கிழமை

’ஆதிலிங்கேஸ்வரரை அழிக்கத் திட்டம்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் பகுதியில், அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதேச மக்கள், அங்குள்ள சில விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறினர்.

இந்த் விடயம் தொடர்பாக தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்பகுதி மக்கள், ஆதி லிங்கேஸ்வரர்  கோவிலுக்குள் அப்பகுதி மக்கள் செல்ல முடியாதென்று, தொல்பொருள் திணைக்களம் தடை விதித்து வரும் நிலையில், வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் கூறினர்.

இந்நிலையில், ஊர் மக்கள் ஆதி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லாத நிலையில், அங்குள்ள பல விக்கிரகங்களை தொல்லியல் திணைக்களம் அழித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், அத்துடன,; பல விக்கிரகங்களும் சூலங்களும் காணாமல் போயுள்ளன எனவும் கூறினர்.

இந்தச் சூழலில், தற்போது கோவிலை நோக்கி பௌத்த தேரர்கள் அமரும் கதிரை உட்பட பல பௌத்த பொருள்கள் இராணுவத்தினரால் உழவியந்திரங்களில், எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும், மக்கள் சுட்டிக்காட்டினர்.

'எமது கோவிலை பௌத்த மயமாக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாம் எண்ணுகின்றோம். இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' எனவும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X