Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் அ.த.க பாடசாலையினை வளமுள்ள பாடசாலையாக மாற்றுமாறு, பெற்றோர்கள் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1983ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட இக்கிராமம் பல அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் காணப்படுகின்றது.
இக்கிராமத்தில் காணப்படுகின்ற பாடசாலை அவசரமாக அமைக்கப்பட்டதன் காரணமாக உயரும் குறைவாகக் காணப்படுவதால் மழை காலத்தில் மழை வெள்ளம் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து கொள்வதாகவும் இது ஓர் ஆரம்ப பாடசாலை என்பதனால் மாணவர்கள் ஈரலிப்பான இடத்தில் இருந்து கல்வி கற்க முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்பாடசாலையில் தரமான வகுப்பறைக் கட்டடத்தை அமைத்துத் தருமாறும், அத்துடன் பாடசாலையினை இலக்காகக் கொண்ட பஸ் சேவையை நடாத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago