2025 மே 17, சனிக்கிழமை

’ஆனைவிழுந்தான் வயற்காணிகள் மீள வழங்கப்படும்’

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பி​ரமணியம் பாஸ்கரன்

வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் வயற்காணிகளை உடனடியாக அம்மக்களுக்கு மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, வனப்பாதுகாவலர் நாயகம் மஹிந்த செனவிரத்ன உறுதியளித்துள்ளார்.

ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், இன்றைய தினம் (10) கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று, வனப்பாதுகாவலர் நாயகம் மஹிந்த செனவிரத்னவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .