2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘ஆறாயிரம் ஏக்கர் உவர் நிலங்களாக மாறியுள்ளது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறியுள்ளதாக விவசாய  அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசம் தொன்மையான ஒரு பிரதேசமாகக் காணபபட்டாலும் அங்கு குடிநீர் பிரச்சனை ஒருபாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது.

கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணமாக  அமைந்துள்ளது.

பூநகரிப் பிரதேசத்தை பொறுத்தவரையில் ஏறத்தாள ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறிறுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அதன் பின்னர் உவர் நீர்த் தடுப்பணைகள் பராமரிக்கப்படாமலும் கைவிடப்பட்டமையால் பூநகரிப் பிரதேசத்தைச் சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்தன.

இதனால் கடல் பெருக்குக்காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியிருப்பதாகவும் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உவர் நீர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப் பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களையும் புனரமைத்து மழை நீரைத்தேக்குவதன் மூலம், நிலங்களின் உவர்த்தன்மையைப் போக்கி, விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .