Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
ஆவா குழுவின் தலைவன் எனக் கூறப்படும் “கிரிவலம்” எனும் புனைப்பெயரைக் கொண்ட இளைஞனை, ஆணைக்கோட்டை பகுதியில் வைத்து, வாள் ஒன்றுடன் நேற்று (13) இரவு கைதுசெய்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட வாள் 6அடி நீளமானது எனவும், அவ்வாளில் தனது புனைப்பெயரைப் பொறித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச்சம்பங்கள், வாள்வெட்டு, சென். பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் வைத்து அண்மையில் இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்குத் தீ மூட்டிய சம்பவங்கள் தொடர்பிலேயே, குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago