Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள கோம்பாவில், தளிர் முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் இசைக்கருவிகள் வழங்கியுள்ளார்.
இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து எழுபதாயிரம் ரூபாயானது இதற்கென அவரால் ஒதுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலைகளுக்கான இன்னியம் இசைக்கருவிகளை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தெரிவு செய்த பாடசாலைகளுக்கு வழங்கி வருகிறார்.
2014ஆம் ஆண்டு ஐந்து பாடசாலைகளுக்கும் 2015ஆம் ஆண்டு 2 பாடசாலைகளுக்கும் 2016ஆம் ஆண்டு ஏழு பாடசாலைகளுக்கும் (இரண்டு பாடசாலைகள் 2015 இலும் உள்வாங்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை) 2017 ஆம் ஆண்டு நான்கு பாடசாலைகளுக்கும், 2018ஆம் ஆண்டு ஒரு பாடசாலைக்குமாக மொத்தம் பதினேழு பாடசாலைகளுக்கு இன்னியம் இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .