2025 மே 19, திங்கட்கிழமை

’இடம்பெயர்ந்த மக்களுக்கு இடம்பெயர்வது குறித்து அறிவுறுத்த வேண்டுமா?’

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இத்தனை வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்குத் தற்போது வெள்ளம் ஏற்பட்டால், எங்கேபோவது என்று அறிவுறுத்தல் வழங்க வேண்டுமா?” என, ஊடகவியலாளர் ஒருவருக்கு மன்னார் பிரதேச செயலாளர் அசட்டையாக வழங்கிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ் நில கிராமங்களான ஜீவபுரம், ஜிம்றோன் நகர், சாந்திபுரம் ஆகிய கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில், இதுவரை சம்பந்தபட்ட அதிகாரிகள் எந்தவோர் அவசர அறிவுறுத்தல்களோ வெள்ள நிவாரண ஏற்பாடுகளோ செய்யவில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவினரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, இதுவரை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக எந்தவித பதிவுகளும் செய்யப்படவில்லைடியனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மன்னார் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, இதுவரை எந்தவித பாதிப்புகளும் பதிவு செய்யப்படவில்லையெனவும்

மக்கள் இடம்பெயர்ந்தால் மாத்திரமே, மேலதிக நாவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

இத்தனை வருடம் இடம்பெயர்ந்த மக்களுக்கு எங்கே போவது என்று அறிவுறுத்தல் வழங்க வேண்டுமா எனவும், அவர் வினவினார்.

அத்துடன் கிரம அலுவலகரோ அல்லது மக்களோ தெரிவித்தால் மாத்திரமே உடனடியாக செயற்படலாமமெனவும், மன்னார் பிரதேச செயலாளர் அசட்டையாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X