Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்று, இடி, மின்னல் தாக்கத்தால், முற்றாக எரிந்துள்ளது. வீட்டிலிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப் பொருள்கள், ஆடைகள் உட்பட, இதர பொருள்கள் எரிந்து சாம்பாராகியுள்ளன.
புதன்கிழமை (17) மாலை இச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில், யாரும் இல்லாததினால் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. எனினும், அவ்வீட்டின் வளாகத்திலிருந்து தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளன.
இதுதொடர்பில், உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago