2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், இன்றைய தினம் (01), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “ஜனநாயகப் போராட்டத்தை வன்முறையால் அழிக்க முடியாது”, “அமைதி காக்கும் படையை உடனே அனுப்பு”, ஓநாய்களிடம் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என்பன உடன் வரவேண்டும்” ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .