Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 09 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில், நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி / தெரிவுப் பரீட்சைகள், இணைய வழியாக நடைபெறவுள்ளன.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி / தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி, இணைய வழியாக நடத்துவதற்கு, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனான கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அந்தத் தீர்மானத்துக்கு அமைய, யாழ். பல்கலைக்கழகத்தால் நுண்கலைமாணி (பரதம்) கற்கை நெறிக்கான இணைய வழி அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் ஜுன் 14ஆம் திகதியும், நுண்கலைமாணி (சங்கீதம்) கற்கை நெறிக்கான இணைய வழி அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் ஜுன் 15ஆம் திகதி;, நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) கற்கை நெறிக்கான இணைய வழி அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் ஜுன்; 21ஆம் திகதியும் நடைபெறும்.
பரீட்சை நேர ஒழுங்குகள் மற்றும் பரீட்சைக்கான இணைய நிகழ்நிலை இணைப்பு பற்றிய விவரங்கள், யாழ். பல்கலைக்கழக அனுமதிகள் கிளையால் பதிவு செய்த மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
50 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
55 minute ago
1 hours ago