Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கைச் சூழலைப்பாதிக்கும் வகையில், இயற்கை வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன இதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட பகுதியின் அதிகளவான இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக முலலைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
கடந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் இங்குள்ள வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்;படுகின்றன. அதாவது சட்டத்துக்கு முரணான வகையில் மணல் கிரவல் அகழ்வுகள் காடழிப்புகள் என பெறுமதி வாய்ந்த வளங்கள் அழிக்கப்படுகின்றன.
இதனைவிட முறையற்ற விதத்திலான அனுமதிகள் வழங்கப்பட்டும் இவ்வாறு வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், கிரவல் அகழ்வுகள் மணல் அகழ்வுகளுக்கான அனுமதிகள் மாவட்டத்தை சேர்ந்த தனி நபர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ வளங்கப்படாது தென்பகுதியைச் சேரந்தவர்களுக்கே வளங்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுசுட்டான், துணுக்காய் போன்ற பகுதிகளிலும் பெருமளவான கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனைவிட வவுனிக்குளம், ஏனைய குளங்களுக்கு நீரைச் சேர்க்கும் ஆறுகள் துண்டாடப்பட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்;டு வருகின்றன. இதற்கான அனுமதிகள் யாவும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெருமளவான வளங்களை அழிக்கும் வகையில் முறையற்ற விதத்தில் வழங்கப்;பட்ட அனுமதிகளால் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன இவற்றை உரிய அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு இவ்வாறான அனுமதிகளை கிராம மட்ட அமைப்புகளுக்கு வழங்கி வழங்களை பாதுகாக்க உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் பொது அமைப்புகளும் கோரிக்ககை விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025