2025 மே 09, வெள்ளிக்கிழமை

இரட்டைக்கொலை சந்தேகநபர் கைது

Niroshini   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா - முருகனூர் பகுதியில் வசித்த தாயும் குழந்தையும் காணாமல் போயிருந்ததாக  2015ஆம் ஆண்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, வவுனியா பொலிஸாரால்  முருகனூர் பகுதியை இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (07) கைதுசெய்யப்பட்டார்.

குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட விசாரணையில், குறித்த தாய் மற்றும் அவரது குழந்தையை தானே கொலை செய்து தீயிட்டு எரித்தாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த பெண் யாழ்., கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த இளைஞன் அவரது காதலன் என ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X