2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இரட்டைக் கொலை: சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை

Freelancer   / 2022 நவம்பர் 11 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் – நொச்சிக்குளம் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 22 ஆவது சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 சந்தேகநபர்களும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

22 ஆவது சந்தேகநபர் வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, அவரை கைது செய்ய நீதவானால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .