2025 மே 07, புதன்கிழமை

இரணைதீவில் பொதுமண்டபம் நிர்மாணம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி  - பூநகரி, இரணைதீவில் பொதுமண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடமாகாண அமைச்சின் நான்கு மில்லியன் ரூபாய் நிதி உதவியில், பூநகரி பிரதேச செயலகத்தால், இக்கட்டட வேலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பகுதி கடற்றொழில் சங்கம், இக்கட்டட வேலைகளின் ஒப்பந்தகாரராக உள்ளது.

1992ஆம் ஆண்டில், இரணைதீவில் இருந்து, மக்கள் முற்றாக இடம் பெயர்ந்தப் பின்னர், இரணைதீவின் அனைத்து கட்டுமானங்களும் சேதமடைந்த நிலையில் காணப்படும் நிலையில், அங்கு குடியேறி உள்ள 84க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஒன்றுகூடலுக்காக இப்பொது நோக்கு மண்டபம் அமைக்கப்படுகின்றது.  

இதற்கான கட்டுமானப் பொருள்கள், முழங்காவில் - இரணைமாதா நகரில் இருந்து படகுகளில், இரணைதீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.  

இரணைதீவில் கல், மணல் காணப்படும் நிலையில், இரணைமாதா நகரில் இருந்து இரணைதீவிற்கு படகுகளில் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதில் பெருமளவு நிதி விரயமாவதாக இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது, இரணைதீவில் மணலையாவது பெற்று, பொது மண்டப வேலைகளை முன்னெடுப்பதன் மூலம், நிதி மிகுதியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X